2003ல் புலிகளுக்கும் அரசுக்குமான போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தின் ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட உரையாடல் இது. தோழன் மைக்கலும் நானும் சேர்ந்து எனது ஆசிரியரும் தோழருமான தெணியானுடன் இந்த உரையாடலைப் பதிவு செய்திருந்தோம் இடையில் உள்ள இந்த 8 வருடகாலத்தில் அதற்கான அரசியற்சூழலும் வாய்ப்பும் கிடைக்கவில்லை
இந்த உரையாடலில் இரண்டு விடயங்கள் ஊடகங்களில் பதிவு செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை
இருப்பினும் விமர்சனப்பாரம்பரியத்தின் ஆரோக்கியம் கருதி தணிக்கை எதுவும் செய்யாமல் வெளியிடுகின்றேன் அன்றைய புலி அரசியல் சூழலுக்கும் இன்றைய தலித் அரசியல்ச் சூழலுக்குமான அரசியல் இடைவெளியையும் முரண்பாடுகளையும் தீண்டாமையினின் தொடர்ச்சியையும் இந்த உரையாடல் நகர்த்திச்செல்கின்றது
****ஜீவமுரளி*****